ADDED : அக் 17, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அய்யப்பா நகர் நுழைவாயில் வளைவு பகுதியில் இருந்து திருப்பருத்திகுன்றம், கீழ்கதிர்பூர், விஷார், குண்டுகுளம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
சாலையின் குறுக்கே, தும்பவனம் கால்வாயுடன் இணையும் மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது. இதில், சிறுபாலத்திற்கும், கால்வாய்க்கும் இடைவெளி பகுதியில், சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சாலையின் அகலம் வெகுவாக குறுகி வருகிறது. இதனால், கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சிறுபாலத்தை ஒட்டி சேதமடைந்த சாலையை சீரமைத்து, அப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.