/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர பள்ளத்தால் வெண்குடியில் விபத்து அபாயம்
/
சாலையோர பள்ளத்தால் வெண்குடியில் விபத்து அபாயம்
ADDED : நவ 09, 2025 02:56 AM

வாலாஜாபாத்: வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில், வெண்குடி அருகே சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.
வாலாஜாபாத் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை வழியாக சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், வாலாஜாபாத், மாசிலாமணி அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே துவங்கி, வெண்குடி எல்லை வரையிலான 500 மீட்டர் துாரத்திற்கு சாலை ஓரத்தில் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளமாக உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இச்சாலையோர ஆபத்தான பள்ளங்களை சீரமைத்து விபத்துகளை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

