sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குவாரிகளால் பாதிக்கப்படும் கிராமங்களின் வளர்ச்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு குடிநீர், சாலை, கட்டடம் உள்ளிட்ட 89 பணிகளுக்கு நிர்வாக அனுமதி

/

குவாரிகளால் பாதிக்கப்படும் கிராமங்களின் வளர்ச்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு குடிநீர், சாலை, கட்டடம் உள்ளிட்ட 89 பணிகளுக்கு நிர்வாக அனுமதி

குவாரிகளால் பாதிக்கப்படும் கிராமங்களின் வளர்ச்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு குடிநீர், சாலை, கட்டடம் உள்ளிட்ட 89 பணிகளுக்கு நிர்வாக அனுமதி

குவாரிகளால் பாதிக்கப்படும் கிராமங்களின் வளர்ச்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு குடிநீர், சாலை, கட்டடம் உள்ளிட்ட 89 பணிகளுக்கு நிர்வாக அனுமதி


ADDED : ஆக 06, 2025 10:12 PM

Google News

ADDED : ஆக 06, 2025 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:குவாரிகளால் பாதிக்கப்படும் கிராமங்களுக்கு, 10.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், குடிநீர், சுகாதாரம், சாலைகள், கால்வாய், கட்டடம் உள்ளிட்ட 89 பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்துார் ஆகிய தாலுகாக்களில், சுற்றுவட்டார 25 கிராமங்களில், பாறைகளை வெடிவைத்து உடைத்து எடுக்க கனிம வள துறை அனுமதி அளித்துள்ளது.

பெரும்பாலான தனியார் கல் குவாரிகளுக்கு, கிராவல் மண் அள்ளவும் மற்றும் கற்களை வெட்டி எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த குவாரிகளில் கிடைக்கும் வருவாயில், குவாரி குத்தகை எடுத்த உரிமையாளர்கள், 30 சதவீதம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும். பத்து சதவீதம் மாவட்ட கனிம வள அறக்கட்டளைக்கு என மொத்தம், 40 சதவீத கட்டணத்தை, மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும்.

சுரங்கம் மற்றும் குவா ரிகளால் பாதிக்கப்படும் கிராமங்களில், குடிநீர், சுகாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தை நலன், வயதுவந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், திறன் மேம்பாடு ஆகிய பணிகளுக்கு 75 சதவீதம் மற்றும் கனிம வளத்தால் பாதிக்கப்படும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு 25 சதவீதம் என, 100 சதவீதம் வளர்ச்சி பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்கிறது.

பணிகள் தேர்வு அதன்படி கடந்த 2024- - 25ம் நிதி ஆண்டுக்கு, கனிம வள குவாரிகளால் பாதிக்கப்படும் சுற்றியுள்ள கிராமங்களின் வளர்ச்சி பணிக்கு, 4.81 கோடி ரூபாய். நடப்பு, 2025- - 26ம் நிதி ஆண்டிற்கு நான்கு பணிகளுக்கு 17 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 2024 - -25ம் நிதி ஆண்டுக்கு குவாரிகளால் பாதிக்கப் படும் அதே கிராமங்களின் வளர்ச்சி பணிக்கு, 3.34 கோடி ரூபாய். நடப்பு, 2025 - -26ம் நிதி ஆண்டிற்கு 2.37 கோடி ரூபாய் என, மொத்தம் 10.69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், 89 வளர்ச்சி பணிகள் செய்வதற்கு, மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கனிம வளத்தால் பாதிக்கப்படும் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அதே கிராமங்களுக்கு, 10.69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 89 வளர்ச்சி பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த பணிகளுக்கு, நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஊராட்சிகளில், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்பட உள்ளது. குடிநீர், சுகாதாரப் பணிக ளுக்கு, நான்கு மாதங்கள்; கட்டடம் உள்ளிட்ட சில பணிகளுக்கு ஆறு மாதங்கள் என, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

குற்றச்சாட்டு கனிம வளத்தால் பாதிக்கப்படும் கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு, ஆக்கப்பூர்வமான பணிகளை தேர்வு செய்வதற்கு சில ஊராட்சி தலைவர்களுக்கு அனுமதி மற்றும் அவகாசமும் அளிப்பதில்லை.

மாறாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தேர்வு செய்யும் பணிகளுக்கு, ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்களிடம் தீர்மானத்தை போட்டு கொடுக்கும் படி நிர்பந்தம் செய்வதாக ஊராட்சி தலைவர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணிகள் தேர்வு செய்து, டெண்டர் விடும் வரையில், தலைவர்களே செய்வதால் நாங்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும். நாங்கள் யாரையும் தீர்மானம் போட்டு கொடுக்கும் படி நிர்பந்தம் செய்யவில்லை என, ஊரக வளர்ச்சி துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஒதுக்கீடு விபரம்: நிதி ஆண்டு பணிகள் எண்ணிக்கை நிதி ஒதுக்கீடு 2024- - 25 40 4.99 கோடி 2025- - 26 49 5.70 கோடி மொத்தம் 89 10.69








      Dinamalar
      Follow us