/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சவுந்தரவல்லி தாயாருக்கு குங்கும அர்ச்சனை
/
சவுந்தரவல்லி தாயாருக்கு குங்கும அர்ச்சனை
ADDED : ஜன 20, 2024 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே சோமங்கலம் கிராமத்தில் சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 750 ஆண்டுகள் பழமையானது. இங்கு, தினமும் ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணிக்கு, சவுந்தரவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு குங்கும அர்ச்சனையும் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

