/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.9 ஆயிரம் சம்பளம் உயர்வு சாம்சங் நிர்வாகம் அறிவிப்பு
/
ரூ.9 ஆயிரம் சம்பளம் உயர்வு சாம்சங் நிர்வாகம் அறிவிப்பு
ரூ.9 ஆயிரம் சம்பளம் உயர்வு சாம்சங் நிர்வாகம் அறிவிப்பு
ரூ.9 ஆயிரம் சம்பளம் உயர்வு சாம்சங் நிர்வாகம் அறிவிப்பு
ADDED : ஜன 08, 2025 07:35 PM
ஸ்ரீபெரும்புதுார்:தொழிலாளர்களுக்கு 9,000 ரூபாய் சம்பளம் உயர்வு அளிப்பதாக 'சாம்சங்' நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில், இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு செப், 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் அன்பரசன், கணேசன், ராஜா தரப்பில், ஏழு கட்டங்களாக பேச்சுநடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், அக்., 14, 15 தேதிகளில் தலைமை செயலகத்தில் நடந்த பேச்சில், இரு தரப்பினரும் ஏற்று கொள்ளும் வகையில் சுமூக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து அக்., 17 ம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பிய தொழிலாளர்களிடம், ஒரு வார பயிற்சி அளிக்கப்படும், என தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் நலன் துணை ஆணையர் அலுவலகத்தில், சாம்சங் நிர்வாகத்தினர் மற்றும் சி.ஐ.டி,யு., தொழில் சங்கத்தினர் இடையே பேச்சு நடந்தது.
அதில், மூன்று ஆண்டுகள் அடிப்படையில், 9, 000 ரூபாய் சம்பள ஊயர்வு அளிக்கப்படும் என எழுத்து பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 19 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இது குறித்து சி.ஐ.டி.யு., சாம்சங் தொழிற்சங்க தலைவர் முத்துகுமார் கூறியதாவது:
சாம்சங் நிர்வாகத்தினர் சம்பள உயர்வுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளனர். 19 கோரிக்கைகள் ஏற்கவில்லை. சி.ஐ.டி.யு., அதை ஏற்கவில்லை. தொழிற்சங்க பதிவு குறித்த நீதிமன்றத்தின் முடிவிற்கு பின் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.