/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் சாலையில் கொட்டும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
/
வாலாஜாபாத் சாலையில் கொட்டும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
வாலாஜாபாத் சாலையில் கொட்டும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
வாலாஜாபாத் சாலையில் கொட்டும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 26, 2024 11:51 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத், 15வது வார்டில், பச்சையம்மன் கோவில் தெரு உள்ளது. இத்தெருவில் பச்சையம்மன் கோவில் அமைந்துள்ளதால், காலை மற்றும் மாலை நேரத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் அச்சாலையின் இருபுறமும், சமீப காலமாக ஆங்காங்கே கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
குறிப்பாக டாஸ்மாக் கடை அருகாமையில் உள்ள சாலையோரங்களில் அதிகளவு காணப்படுகின்றன. வாலாஜாபாத் பஜார் வீதியில் இறைச்சி கடை வைத்துள்ளவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இதனால், துர்நாற்றம் ஏற்படுவதோடு மழை நேரங்களில், கோழி இறைச்சி கழிவு கலந்த நீர், சாலையில் வழிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, இச்சாலையோரங்களில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.