/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா
/
சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா
ADDED : நவ 24, 2025 01:54 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் தாலுகா, மருத்துவன்பாடியில் ஹாண்ட் இன் ஹாண்ட் நிறுவனம் சார்பில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா 100-வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.
ஹாண்ட் இன் ஹாண்ட் திட்ட மேலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். ஏரி பாசன சங்க தலைவர் ஏழுமலை, ஒருங்கிணைப்பாளர் பார்வதி முன்னிலை வகித்தனர்.
மருத்துவன்பாடி ஊராட்சி தலைவர் வெங்கடேசன் பங்கேற்று துவக்கி வைத்தார். அதில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா படத்திற்கு மலர் அலங்காரம் செய்து, பஜனை பாடல் பாடப்பட்டது. பின், பக்தர்கள் அனைவருக்கும் ஆன்மீக சொற்பொழிவு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சிறுவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

