/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழந்தை கடத்தல் உண்மையில்லை வதந்தி பரப்புவோருக்கு எஸ்.பி., எச்சரிக்கை
/
குழந்தை கடத்தல் உண்மையில்லை வதந்தி பரப்புவோருக்கு எஸ்.பி., எச்சரிக்கை
குழந்தை கடத்தல் உண்மையில்லை வதந்தி பரப்புவோருக்கு எஸ்.பி., எச்சரிக்கை
குழந்தை கடத்தல் உண்மையில்லை வதந்தி பரப்புவோருக்கு எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : மார் 06, 2024 12:02 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், குழந்தை கடத்தல் நடைபெறுவதாக, சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக பல்வேறு தகவல்கள் பரவுவதால், பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படம், வீடியோக்கள் உண்மை இல்லை எனவும், அவற்றை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் எனவும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
மேலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவ்வாறு பதிவு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம்எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி குறித்து, பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின், 044- 27236111 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்
வாலாஜாபாத் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், குடியிருப்பு தெருக்கள் மற்றும் சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்என, பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, வாலாஜாபாத் ஒன்றிய கிராம பகுதிகளில், புதிதாக, 'சிசிடிவி' கேமரா பொருத்துதல் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படாத கேமராக்களில் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

