/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் ஆதார் அட்டைக்கு பள்ளி மாணவியர் காத்திருப்பு
/
உத்திரமேரூரில் ஆதார் அட்டைக்கு பள்ளி மாணவியர் காத்திருப்பு
உத்திரமேரூரில் ஆதார் அட்டைக்கு பள்ளி மாணவியர் காத்திருப்பு
உத்திரமேரூரில் ஆதார் அட்டைக்கு பள்ளி மாணவியர் காத்திருப்பு
ADDED : அக் 27, 2025 11:42 PM

உத்திரமேரூர்: -உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க பள்ளி மாணவியர் நீண்ட நேரம் நேற்று காத்திருந்தனர்.
உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் 5 உயர்நிலை, 13 மேல்நிலைப் பள்ளிகள் என, 18 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 2,800 மாணவியர் படித்து வருகின்றனர்.
இதில், ஆண்டுதோறும் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும், மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதற்காக, மாணவியரின் வங்கிக்கணக்கில், ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்காக, அரசு பள்ளியில் படிக்கும் மாணவியர் விடுப்பு எடுத்துக்கொண்டு, புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ- - சேவை மையத்திற்கு நேற்று வந்தனர்.
அப்போது, இ- - சேவை மையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மாணவியர் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.
இதனால், உத்திரமேரூர் தாலுகாவில், கூடுதலாக இ - -சேவை மையங்களை திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி கூறியதாவது:
பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு, கடந்தாண்டு பள்ளியிலேயே ஆதார் அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு நிர்வாக காரணங்களுக்காக பள்ளியில் பதிவு செய்யும் முறை நிறுத்தப்பட்டது.
இதற்காக, மாணவியர் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் உள்ள, இ- - சேவை மையத்தை அணுகி, பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில், தபால் அலுவலகங்களில் பள்ளி மாணவியருக்கு, ஆதார் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

