/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 08, 2025 09:33 PM

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் பெருமாள் தெரு மீன் மார்க்கெட் எதிரில், மளிகை தெரு சந்திப்பில், பொது கழிப்பறை உள்ளது. இப்பகுதிவாசிகள் கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிப்பறையில் இருந்து பாதாள சாக்கடை வாயிலாக வெளியேற வேண்டிய கழிவுநீர், வெளியேறி, கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும், துர்நாற்றத்துடன் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மீன்மார்க்கெட், புதிய ரயில் நிலையம், ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், இப்பகுதியில் தொடர்ந்து வெளியேறும் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.