/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

ADDED : ஏப் 09, 2025 01:30 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார், டி.ஆர்.சி., நகர் இரண்டாவது பிரதான சாலையில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில், ஒரு வாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது.
இவ்வாறு சாலையில் வழியும் கழிவுநீர், அருகே உள்ள காலி மனையில் தேங்கி, குட்டையாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அச்சம் நிலவி வருகிறது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.