ADDED : நவ 17, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்,
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பென்னலுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான தெருக்களில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீருடன் கலந்து, சாலையில் தேங்குகிறது. மேலும், பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுநீரால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
இதனால், அப்பகுதியின் நோய் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது. எனவே, அப்பகுதியில், மழைநீர் மற்றம் கழிவுநீர் வடிய, வடிகால் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.