ADDED : பிப் 15, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அமராவதிபட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 45. இவர், தன் வீட்டின் அருகாமையில் சாலை ஓரத்தில் சில்லரை வியாபாரப் பொருட்கள் மற்றும் டிபன் கடை வைத்து உள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு 9:30 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டிக் விட்டு அருகில் உள்ள தன் வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கச் சென்றார்.
நேற்று காலை வந்து கடையை திறக்க வந்தபோது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார். உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் வைத்திருந்த 7,000 ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

