ADDED : நவ 19, 2024 03:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி, வெள்ளகுளம் தெருவில், 15 ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைகுழாயின் மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது.
தண்ணீர் வசதி இல்லாலததால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பயன்பாடின்றி உள்ளதால், கழிப்பறை வளாகம் முழுதும் புதர்மண்டி வீணாகி வருகிறது.
எனவே, பொது கழிப்பறை கட்டடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெள்ளகுளம் தெருவினர் வலியுறுத்தி உள்ளனர்.