/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழையால் ஏரிகளில் மண் எடுக்கும் பணி நிறுத்தம்
/
மழையால் ஏரிகளில் மண் எடுக்கும் பணி நிறுத்தம்
ADDED : நவ 13, 2024 11:19 PM

காஞ்சிபுரம்,:சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை; சென்னை - கன்னியாகுமரி தொழில் வழிதட திட்டம்; சென்னை - பெங்களூரு நான்குவழிச் சாலையில் இருந்து ஆறுவழிச் சாலை போடும் திட்டம் ஆகிய பல்வேறு சாலை விரிவுபடுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சாலை விரிவுபடுத்தும் பணிக்கு, ஏரி மண்ணை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண்ணை அள்ளும் பணிக்கு, ராட்சத இயந்திரங்கள் மற்றும் டிப்பர் லாரிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
சில தினங்களாக, பகல் மற்றும் இரவு நேரங்களில், மழை பெய்து வருவதால், ராட்சத இயந்திரங்கள், டிப்பர் லாரிகளை இயக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இதனால், சாலை போடும் பணிக்கு மண்ணை எடுத்து செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், போந்தவாக்கம், கீழம்பி, கொட்டவாக்கம் ஆகிய ஏரிகள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டுப்பாக்கம், சயனபுரம் உள்ளிட்ட சில ஏரிகளில் மண்ணை அள்ளும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.
மழைக்காலம் நிறைவு பெற்ற பிறகே, மண் அள்ளும் பணிகள் துவக்கப்படும் என, மண் அள்ளும் உரிமம் பெற்ற சாலை விரிவுபடுத்தும் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.