UPDATED : நவ 03, 2026 04:41 PM
ADDED : நவ 03, 2026 04:36 PM

வல்லாரை கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பி.சத்தியபாணி கூறியதாவது:
களிமண் நிலத்தில், நாட்டு சுரைக்காய், தக்காளி, கீரை உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். விளை பொருட்களுக்கு, ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், வல்லாரை கீரை சாகுபடி செய்துள்ளேன். நம்மூர் களிமண்ணுக்கு அருமையாக வளர்க்கிறது. இந்த வல்லாரை கீரை சாகுபடி பொறுத்தவரையில், ஒரு முறை விதை விதைத்து விட்டால் போதும், கீரை பறிக்க பறிக்க அமுதசுரபி போல, அறுவடை செய்து கொண்டே இருக்கலாம்.
இதே கீரையை, உலர்த்தி பொடி செய்து, விற்பனை செய்யும் திறனை விவசாயிகள் வளர்த்து கொண்டால், கூடுதல் வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
– பி.சத்தியபாணி,
93808 57515.
