ADDED : மார் 17, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் ரோகித் 14; தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளி நேரம் முடிந்து, ஆட்டோ மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஒழுகரை கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, 25, என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்தார். அப்போது சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
காயமடைந்த ரோகித்தை அப்பகுதியினர் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள், மாணவர் ரோகித் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆட்டோ டிரைவர் பாலாஜியை கைது செய்தனர்.

