/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிக பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி மழைநீர் வடிகாலில் சிக்கியதால் நெரிசல்

ADDED : பிப் 21, 2025 01:05 AM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை ---பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் லட்சகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது, சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
இந்நிலையில், சுங்குவார்சத்திரம் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிக்காக, அப்பகுதியல் புதிய சர்வீஸ் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை அளவிற்கு அதிகமாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் சாலையில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை நோக்கி வந்தது லாரி ஒன்று, சர்வீஸ் சாலையை கடக்கும் போது, மழைநீர் வடிகாலின் சிமென்ட் சிலாப் உடைந்து பள்ளத்தில் சிக்கியது.
இதனால், சென்னை --- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மார்மாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அளவு அதிகளாக பாரம் ஏற்றிகொண்டு வந்து, மழைநீர் சிமென்ட் கால்யில் சிக்கிய லாரியால், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
சுங்குவார்சத்திரம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.