/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வானசுந்தரேஸ்வரர் கோவிலில் தைப்பூச உற்சவம் விமரிசை
/
வானசுந்தரேஸ்வரர் கோவிலில் தைப்பூச உற்சவம் விமரிசை
ADDED : பிப் 11, 2025 06:45 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கிராமத்தில் பெரியநாயகி சமேத வானசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச உற்சவ பெருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைப்பூச உற்சவ பெருவிழா நேற்று நடந்தது.
அதிகாலை 2:00 மணியளவில் மூலவருக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 4:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, காலை 5:00 மணிக்கு வானசுந்தரேஸ்வரர், பெரியநாயகி அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்குடையுடன் வீதியுலா வந்தனர்.
அதேபோல், உத்திரமேரூர் பாலசுப்ரமணியர் கோவிலில், நேற்று தைப்பூச சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

