/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாயார்குளம் சுடுகாடு 3 நாட்கள் மூடல்
/
தாயார்குளம் சுடுகாடு 3 நாட்கள் மூடல்
ADDED : மார் 08, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம், தாயார்குளம் சுடுகாடு இயங்கி வருகிறது. இங்கு, மின் தகன மேடை மூலம், சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.
காஞ்சிபுரம் நகரில் பெரும்பாலான சடலங்கள் இந்த சுடுகாட்டில் எரியூட்டப்படுவது வழக்கம். இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக, இன்று முதல், நாளை மறுதினம் வரை மூன்று நாட்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, சடலங்கள் எரியூட்ட, வெள்ளைக்குளம் சுடுகாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

