/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கன்டெய்னர்
/
தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கன்டெய்னர்
ADDED : பிப் 14, 2024 12:23 AM
திருவேற்காடு:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் இருந்து, தனியார் 'ஆன்லைன்' நிறுவனத்திற்கு காய்கறி ஏற்றிக்கொண்டு, 'கன்டெய்னர்' லாரி ஒன்று சென்றது.
லாரியை ஆசை தம்பி, 32, என்பவர் ஓட்டினார். வேலப்பன்சாவடி அருகே சென்ற போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி, கவிழ்ந்தது.
இந்த விபத்தில், லாரியின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி, டயர்கள் சேதமடைந்தன.
இதனால், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், இரண்டு ராட்சத, 'கிரேன்'கள் உதவியுடன், இரண்டு மணி நேரம் போராடி லாரியை அப்புறப்படுத்தினர்.
அதிர்ஷ்டவசமாக, ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சாலையின் நடுவிலுள்ள தடுப்புச் சுவரை ஓட்டுனர் கவனிக்காமல் சென்றது, அறிவிப்பு பலகை ஏதும் இல்லாதது விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

