/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை துவக்கம்
/
கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை துவக்கம்
ADDED : மே 18, 2025 10:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் தென்புறம், கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை நேற்று துவங்கியது. இதில், பிற்பகல் 12:00 மணிக்கு சப்த கன்னியம்மனுக்கு அபிஷேகமும், மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடந்தது.
இரவு 8:00 மணிக்கு கங்கையம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடந்தது.
இரண்டாம் நாள் விழாவான இன்று, காலை 8:00 மணிக்கு, பால்குட ஊர்வலமும், இரவு 9:00 மணிக்கு பம்பை குழுவினருடன், கரக ஆட்டம், நையாண்டி மேளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட வாத்தியங்களுடன் சிரசு ஊர்வலம் நடக்கிறது.
நாளை, பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.
நாளை மறுநாள், காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 9:00 மணிக்கு நாடகம் நடக்கிறது.