/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விதிமீறி வந்த கன்டெய்னர் லாரி தந்தை, மகள் உயிரை பறித்தது
/
விதிமீறி வந்த கன்டெய்னர் லாரி தந்தை, மகள் உயிரை பறித்தது
விதிமீறி வந்த கன்டெய்னர் லாரி தந்தை, மகள் உயிரை பறித்தது
விதிமீறி வந்த கன்டெய்னர் லாரி தந்தை, மகள் உயிரை பறித்தது
ADDED : பிப் 09, 2025 08:56 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பட்டுநுால் சத்திரம், ராமானுஜர் தெருவைச் சேந்தவர் சதீஷ் அருண்குமார், 35; டிரைவர். தாழம்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி, 30. தம்பதிக்கு இரண்டரை வயதில் ஜோஷ்னி என்ற மகள் மற்றும் மூன்று மாத பெண் குழந்தை உள்ளனர்.
நேற்று மாலை விஜயலட்சுமியின் தாயை, சிங்கபெருமாள் கோவிலில் பேருந்தில் ஏற்றிவிட்டு, புல்லட் இருசக்கர வாகனத்தில், மகள் ஜோஷ்னி உடன் சதீஷ் அருண்குமார் ஸ்ரீபெரும்புதுார் சென்றார்.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லம் -- வடகால் அருகே வந்தபோது, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து விதிமீறி எதிர்திசையில் வந்த கன்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து புல்லட் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சதீஷ் அருண்குமார் மற்றும் இரண்டரை வயது குழந்தை சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். ஒரகடம் போலீசார் இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பித்து வைத்து, தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

