/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடை பணியால் சகதியாக மாறியுள்ள சாலை
/
பாதாள சாக்கடை பணியால் சகதியாக மாறியுள்ள சாலை
ADDED : நவ 16, 2024 12:48 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு வேதாச்சலம் நகர் விரிவாக்கம், இளங்கோ தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக, கடந்த வாரம் சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. பணி முடிந்ததும், சாலையை சமன்படுத்தி சீரமைக்கவில்லை.
இதனால், இரு நாட்களாக காஞ்சிபுரத்தில் விட்டு விட்டு பெய்யும் மழையால் சகதி சாலையாக மாறியதோடு, குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய பகுதியில் மண் உள்வாங்கியுள்ளதால், பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் வாகனங்கள் சகதியில் சிக்கிக் கொள்கின்றன. மேலும், நடந்து செல்லும் பாதசாரிகள் சகதியில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, இளங்கோ தெருவில் பாதாள சாக்கடை பணியால் சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.