ADDED : செப் 29, 2025 12:38 AM
காஞ்சிபுரம்:வெவ்வேறு இடங்களில், கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை சின்னத் தெருவைச் சேர்ந்த தினேஷ், 26, என்பவர், கஞ்சா விற்பனை செய்வதாக சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த தினேஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.
l வாலாஜாபாத் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராசூல், 23.,கருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ், 22, ஆகிய இருவரும் கருக்குப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட வாலாஜாபாத் போலீசார் கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த ராசூல், ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந் து 2,300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.