/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் வெட்டியதில் மூவர் காயம்
/
இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் வெட்டியதில் மூவர் காயம்
இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் வெட்டியதில் மூவர் காயம்
இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் வெட்டியதில் மூவர் காயம்
ADDED : செப் 30, 2025 01:41 AM
காஞ்சிபுரம்;கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், இருவரிடையே ஏற்பட்ட வாய் தகராறு பிரச்னையில், வாலிபர் கத்தியால் வெட்டியதில், மூவர் காயமடைந்தனர்.
காஞ்சி புரம் அடுத்த, கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசிப்பவர் டில்லிபாபு, 26.
இவர், தன் மேல் பிளாக்கில் உள்ள, கதவு எண் 52ல் வசிக்கும் அரவிந்த், 26, என்பவரிடம், 'அதிக சத்தத்துடன் ஏன் டிவி பார்க்கிறீர்கள்' என, நேற்று முன்தினம் இரவு கேட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அரவிந்த் என்பவர், டில்லிபாபுவை கட்டடத்தின் கீழே இழுத்து வந்துள்ளார். அங்கிருந்த அரவிந்த் நண்பர்களான செல்வம், கார்த்திக், சுரேஷ் ஆகியோர் சேர்ந்து, டில்லிபாபு மற்றும் அவரது அண்ணன் சங்கர், 28, ஆகியோரை தாக்கியுள்ளனர்.
இதில், செல்வம் என்பவர் கத்தியை எடுத்து வந்து, டில்லிபாபு, சங்கர் ஆகியோரை வெட்டியுள்ளார். இதில், இருவருக்கும் தலை மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த அவரது தாயார் காமாட்சி என்பவருக்கும் கையில் வெட்டு விழுந்தது.
டில்லிபாபு, சங்கர், காமாட்சி ஆகியோர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செல்வம், அரவிந்த் உள்ளிட்டோரை தேடினர். ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடினர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.