/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உட்பட மூவர் கைது
/
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உட்பட மூவர் கைது
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உட்பட மூவர் கைது
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : ஆக 13, 2025 01:57 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம், டோல்கேட் அருகே உள்ள தண்ணீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக, விஷ்ணுகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் ரோந்து பணியை மேற்கொண்ட போலீசார், அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக, நரேஷ்குமார், 19, 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, ஓரிக்கை பாலாற்று பகுதியில் போலீசார் ரோந்து பணி செய்தபோது, கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக, மணிபாரதி, 23. என்பவரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து, 2.6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.