/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல்
/
ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல்
ADDED : டிச 25, 2025 06:04 AM

சிங்கபெருமாள் கோவில்: கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்லும் மக்களால் நேற்று ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கி ஒரகடம், மறைமலை நகர், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள், கார்கள்,பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.
இதன் காரணமாக, பழவேலி, புலிப்பாக்கம், பரனூர், இருங்குன்றம்பள்ளி, பாலாற்று பாலம், மாமண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜி.எஸ்.டி., சாலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளதால் வானங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

