/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏனாத்துார் ரயில்வே கேட்டில் லாரி மோதியதால் தீப்பொறி ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : டிச 05, 2024 01:59 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, நேற்று காலை 7:00 மணிக்கு, ஏனாத்துார் ரயில்வே கடவு பாதை 28ஐ கடந்து செல்ல முயன்றது.
அப்போது, அருகில் உள்ள கேட் மீது மோதி விபத்து ஏற்படுத்தி சென்றது. இதனால், தடுப்பு கம்பி மேலே சென்று, ரயில்வே துறையின் மின்கம்பி மீது பட்டுள்ளது.
இதனால், சாலையில் தீப்பொறி விழுந்ததால், அவ்வழியே சென்றவர்கள் அச்சமடைந்தனர். ரயில்வே கேட் மீது லாரி மோதியதால், இரும்பு தடுப்பு வளைந்தது.
ரயில்வே கேட்டில் விபத்து ஏற்பட்டதால், செங்கல்பட்டு மார்க்கமாக, 8:15க்கு சென்னை செல்லும் மின்சார ரயில், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையத்தில், சென்னை, செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு ரயில் வரும் என, நுாற்றுக்கணக்கான பயணியர் காத்திருந்தனர். ஆனால், ரயில்வே ஊழியர்களால் இரும்பு கேட் சரி செய்யப்படும் வரை ரயில்கள் இயக்கப்படவில்லை. காஞ்சிபுரம் புதிய மற்றும் பழைய ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்த பயணியர், பேருந்து வாயிலாக சென்றனர்.
ரயில்வே கேட் சரிசெய்யப்பட்ட பின், ஒரு மணி நேரம் கழித்து, புதிய ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
இதனால், புதிய மற்றும் பழைய ரயில் நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரியை, ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.