/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழங்குடியின பெண்களுக்கு பயிற்சி
/
பழங்குடியின பெண்களுக்கு பயிற்சி
ADDED : அக் 21, 2024 01:28 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சார்பில், பழங்குடியின பெண்களுக்கு வீட்டிலேயே தோட்டம் அமைத்து, ரசாயன உரமில்லாத இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
இதில், இயற்கை விவசாயி தங்கவேல், எளிய முறையில் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, பயிற்சி பெற்ற பெண்களுக்கு காய்கறி விதைகள், காய்கறி நாற்று செடிகள் மற்றும் மண்புழு உரம் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கினார்.
இதில், முட்டவாக்கம், வெள்ளகுளம், இளையனார்வேலுார், நத்தப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 52 பழங்குடியின பெண்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

