/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழங்குடியினர் தொகுப்பு வீடு 'தாட்கோ' கட்ட வலியுறுத்தல்
/
பழங்குடியினர் தொகுப்பு வீடு 'தாட்கோ' கட்ட வலியுறுத்தல்
பழங்குடியினர் தொகுப்பு வீடு 'தாட்கோ' கட்ட வலியுறுத்தல்
பழங்குடியினர் தொகுப்பு வீடு 'தாட்கோ' கட்ட வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2025 02:14 AM
குன்றத்துார்:வட்டம்பாக்கம் ஊராட்சியில், 55 இருளர் பழங்குடியினருக்கு, அரசு சார்பில் கட்டப்பட உள்ள இலவச தொகுப்பு வீடுகளை, தாட்கோ மூலமாக கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சி, காஞ்வாக்கம் கிராமத்தில், வீடு இல்லாத இருளர் பழங்குடி மக்கள், 55 பேருக்கு, தலா 1.5 சென்ட் நிலம் வழங்கி, அங்கு அரசின் தொகுப்பு வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள், ஊரக வளர்ச்சி துறை சார்பில் விரைவில் துவங்கப்பட உள்ளன. இந்நிலையில், கட்டுமான பணிகளை தாட்கோ மூலமாக கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இருளர் பழங்குடியினருக்கு, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக கட்டப்படும் பெரும்பாலான குடியிருப்புகளில், ஜல்லி மற்றும் சிமென்ட் கலவை சரியான விகிதத்தில் கலக்கப்படாமல் கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் கான்கிரீட் போடப்படுகிறது.
இதன் காரணமாக, அந்த வீடுகளின் தரம் குறைகிறது. கட்டடம் விரைவில் சேதமாவதால் பழங்குடியினருக்கு அரசு ஒதுக்கும் நிதி வீணடிக்கப்படுகிறது.
எனவே, கட்டுமான பணிகள் சரியாக நடக்க, வட்டம்பாக்கம் ஊராட்சியில் கட்டப்பட உள்ள இருளர் பழங்குடியினருக்கான தொகுப்பு வீடுகளை, தாட்கோ மூலமாக கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.