/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண்ணிடம் செயின் பறிப்பு படப்பையில் இருவர் கைது
/
பெண்ணிடம் செயின் பறிப்பு படப்பையில் இருவர் கைது
ADDED : நவ 24, 2024 07:41 PM
படப்பை:படப்பை, ஆதனஞ்சேரியில், தனியாக இருந்த 70 வயது மூதாட்டியிடம், இளைஞர்கள் இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, செயின் பறித்துச் சென்றனர்.
அப்போது அந்த மூதாட்டி கூச்சலிட்டதால், அங்கிருந்தோர் அந்த இளைஞர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது, செயினை துாக்கி வீசி எறிந்து விட்டு, அருகிலுள்ள ஏரியின் புதர் மண்டிய பகுதியில் இளைஞர்கள் பதுங்கினர்.
இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார், தேடுதல் பணியில் ஈடுபட்டு இளைஞர்கள் இருவரையும் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், துாத்துக்குடியைச் சேர்ந்த பேரீன்பநாதன்,20, திருநெல்வெலி மாவட்டத்தைச் சேர்ந்த அபேஜ் பிராகஷ்,19, என தெரிந்தது.
இருவரும் படப்பை அருகே தங்கி,'ஆன்லைன்' உணவு 'டெலிவரி' செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.