/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீடு புகுந்து செயின் பறித்த இருவர் கைது
/
வீடு புகுந்து செயின் பறித்த இருவர் கைது
ADDED : மார் 04, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் : தாம்பரம் அருகே வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகம்மாள், 68. இவர், கடந்த பிப்., 22ம் தேதி மகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், 'இண்டர்நெட்' இணைப்பு கொடுக்க வந்ததாகக் கூறி உள்ளே நுழைந்தனர்.
அப்போது, நாகம்மாள் அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து, தப்பிச் சென்றனர். இதுகுறித்து நாகம்மாள் அளித்த புகாரின்படி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, விசாரித்து வந்தனர்.
விசாரணையில், கூடுவாஞ்சேரி இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வந்த விஷ்ணு, 24, விஜய், 23, ஆகிய இருவரை கைது செய்த போலீசார், 5 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

