/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் இடையூறாக நிறுத்தப்படும் டூ - வீலர்கள்
/
வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் இடையூறாக நிறுத்தப்படும் டூ - வீலர்கள்
வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் இடையூறாக நிறுத்தப்படும் டூ - வீலர்கள்
வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் இடையூறாக நிறுத்தப்படும் டூ - வீலர்கள்
ADDED : நவ 12, 2024 10:31 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேருந்து நிலையதிற்கு, பல்வேறு கிராமங்களிலிருந்து, இருசக்கர வாகனத்தில் வந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு,பேருந்து வாயிலாக பலர் வந்து செல்கின்றனர். அப்போது, தங்களது வாகனங்களை, வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல்,பேருந்து நிலையத்திலே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
பேருந்து நிலையத்தின் உள்ளே வரும், பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பேருந்துகள், பேருந்து நிலையத்தின் உள்ளே வராமல், வெளியே நிறுத்தி பயணியரை ஏற்றி செல்கின்றன.
பயணியருக்கு பேருந்துக்காக, எங்கே காத்திருப்பது என்ற குழப்பமான நிலை நிலவுகிறது. எனவே, பேருந்து நிலையத்தின் உள்ளே, இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்குமாறு, பயணியர் மத்தியிலே கோரிக்கை எழுந்துள்ளது.