/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
/
உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
ADDED : பிப் 01, 2025 08:50 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்யதேசமாக விளங்குகிறது. இங்கு, உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி, இடது கால் துாக்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள 22 திவ்யதேசங்களில் தொண்டை நாட்டு திருத்தலங்களில், இத்தலம் கச்சி ஊரகம் என அழைக்கப்படுகிறது. கச்சி என்றால் காஞ்சிபுரம். ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்யதேசங்கள், இந்த ஒரே கோவிலுக்குள் அமைந்துள்ளது.
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் நான்கு திவ்யதேசங்களையும், இந்த ஒரே கோவிலில் தரிசனம் செய்யலாம். பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். கடைசியாக 2020ல் நடந்தது.
அதன்பின், கொரோனா ஊரடங்கு மற்றும் திருப்பணி நடந்ததால், நான்கு ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான தை மாத பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து காலை, மாலை சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.