/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் வடியாத வெள்ளம்

ADDED : டிச 05, 2024 11:43 PM

ஸ்ரீபெரும்புதுார்,
குன்றத்துார் ஒன்றியம், எழிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட மதுவந்தாங்கல் பகுதியில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அந்தோணியார் தெருவில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை.
இதனால், ஒவ்வொரு மழையின் போதும், குடியிருப்புகளில் மழைநீர் வாரக்கணக்கில் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், வாரக்கணக்கில் தேங்கும் மழைநீர், கழிவுநீராக மாறி வருவதோடு, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், குடியிருப்புவாசிகள் நோய் தொற்று பரவும் அச்சத்தில் உள்ளனர். தவிர, மழை நீரில் இருந்து பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
எனவே, குடியிருப்பை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், நிரந்தர தீர்வாக மழைநீர் வடிகால் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள்எதிர்பார்க்கின்றனர்.