/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரும்பாக்கம் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
கரும்பாக்கம் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 04, 2025 12:48 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம்,அரும்புலியூர் ஊராட்சியில், கரும்பாக்கம் பொதுக்குளம் உள்ளது. இந்த குளத்து நீரை, அப்பகுதிவாசிகள் கால்நடைகளுக்காக பயன்படுத்திவந்தனர்.
தற்போது, முறையான பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து, பாசி படிந்து உள்ளது.
இதிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் புகும் சூழல் உள்ளது.
தொடர்ந்து, கால்நடைகளுக்கு குடிநீர் அளிக்க முடியாத நிலையும் உள்ளது. இதை சீரமைக்க, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுவரையும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நிலத்தடி நீராதாரமாக விளங்கும் கரும்பாக்கம் பொதுக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள்வலியுறுத்தியுள்ளனர்.

