/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்
/
குடிநீர் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 14, 2024 11:35 PM

ஏனாத்துார்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சி, கனக துர்க்கையம்மன் கோவில் அருகில், ஊராட்சி சார்பில், 2012ல் ஆழ்துளைக் குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கும், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளைக் குழாயில் பொருத்தப்பட்டு இருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது.
மின்மோட்டாரை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. இதனால், தொட்டியை சுற்றியிலும் செடி, கொடிகள் புதர்போல மண்டி வீணாகி வருகிறது.
எனவே, மின்மோட்டாரை சீரமைத்து, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

