/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வழக்கறுத்தீஸ்வரர் குளத்திற்கு வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்
/
வழக்கறுத்தீஸ்வரர் குளத்திற்கு வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்
வழக்கறுத்தீஸ்வரர் குளத்திற்கு வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்
வழக்கறுத்தீஸ்வரர் குளத்திற்கு வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 09, 2025 01:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காந்தி சாலையில், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 16 வாரம் விளக்கேற்றி வைத்து, இறைவனை 16 முறை வலம் வந்து வழிப்பட்டால், தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், வாரந்தோறும் திங்கட்கிழமையில், இக்கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவில் வளாகத்தில், சரஸ்வதி தீர்த்தம் என, அழைக்கப்படும் தெப்ப குளம் உள்ளது. இக்குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய் அடைபட்டுள்ளதாலும், முறையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாததாலும், ஆண்டுதோறும் பருவமழைக்கு இக்குளம் முழுமையாக நிரம்புவதில்லை. தற்போது சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது.
எனவே, இக்குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களை சீரமைத்து, முறையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.