/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சிமென்ட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமான சிமென்ட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 08, 2025 09:32 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் கிராமத்தில், கடந்த 2021 --- 22 நிதி ஆண்டில், 7.77 கோடி செலவில், 178 குடியிருப்புகள் கட்டப்பட்டு, பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்குள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க, அனைத்து தெருக்களுக்கும் பைப்லைன் புதைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது.
அப்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ள, சிமென்ட் சாலையை உடைத்து பைப்லைன் புதைக்கும் பணி நடந்தது.
ஆனால், உடைக்கப்பட்ட சாலை சீர்செய்யாமல் உள்ளது. இதனால், அவ்வழியே வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர். இதை சரிசெய்ய, அப்பகுதிவாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சேதமடைந்த சிமென்ட் சாலையை விரைந்து சீரமைக்க, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

