/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
/
உத்திரமேரூர் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 05, 2024 11:39 PM

உத்திரமேரூர்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி உள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு முன், நந்தி வர்ம பல்லவ மன்னரால் உருவாக்கப்பட்ட 'வரைமேகன் தடாகம்' என்கிற மற்றொரு பெயரும் இந்த ஏரிக்கு உள்ளது.
20 அடி ஆழம் கொள்ளளவு கொண்ட இந்த ஏரி, மழைக்காலத்தில் முழுமை யாக நிரம்பினால், ஏரி தண்ணீரை கொண்டு, 18 மதகுகள் வாயிலாக வேடபாளையம், காக்கநல்லுார், முருக்கேரி, நீரடி, குப்பையநல்லுார், காவனுார்புதுச்சேரி, காட்டுப்பாக்கம், பட்டஞ்சேரி, ஓங்கூர் உள்ளிட்ட 18 கிராமங்களில் உள்ள 5,600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
கடந்த சில தினங்களுக்கு முன், 'பெஞ்சல்' புயலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதையடுத்து, அனுமந்தண்டலம் செய்யாற்று அணைக்கட்டு கால்வாய் வாயிலாக உத்திரமேரூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, ஏரி முழுமையாக நிரம்பி நேற்று மாலை கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறத் துவங்கி உள்ளது.
இதனால், உத்திர மேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.