/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையை மறித்து நிற்கும் வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையை மறித்து நிற்கும் வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
சாலையை மறித்து நிற்கும் வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
சாலையை மறித்து நிற்கும் வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 19, 2025 09:46 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டிற்கு, காய்கறி ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள், ரெட்டிபேட்டை சாலையின் இருபுறத்தையும் மறித்து நிறுத்தப்படுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ரெட்டிபேட்டையில், ராஜாஜி மார்க்கெட் இயங்கி வருகிறது. மார்க்கெட்டிற்கு காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள், மார்க்கெட் வளாக காலி இடத்தில் நிறுத்தாமல், மார்க்கெட் பிரதான நுழைவாயில் அமைந்துள்ள, ரெட்டிபேட்டை சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
அந்த இடத்திலேயே, காய்கறி மூட்டைகள் இறக்கி வைக்கப்படுகின்றன.
சாலையை மறித்து நிற்கும் சரக்கு வாகனங்களால், மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, இச்சாலை வழியாக ரயில்வே சாலை, தும்பவனம் அருணாசலம் தெரு, பாக்ராபேட்டை, ஆனந்தாபேட்டை, வெங்கடேசபாளையம், ரங்கசாமிகுளம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே, ராஜாஜி மார்க்கெட்டிற்கு காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் இருபுறமும் நிறுத்தாமல், மார்க்கெட் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் நிறுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்திவருகின்றனர்.