/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ் இயங்காததால் போக்குவரத்திற்கு சிரமப்படும் கிராம மக்கள்

ADDED : டிச 25, 2025 05:54 AM
உத்திரமேரூர்: காஞ்சிபுரம் - காரணிமண்டபம் இடையே இயக்கப்படும் அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முறையாக இயங்காததால் போக்குவரத்திற்கு சிரமபடுவதாக கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், காரணிமண்டபத்தில் இருந்து, களியாம்பூண்டி, பெருநகர் உள்ளிட்ட பகுதி வழியாக தடம் எண்: 34ஏ., என்கிற மகளிருக்கான இலவச அரசு பேருந்து காஞ்சிபுரம் வரை இயங்குகிறது.
காரணிமண்டபம், மேல்பாக்கம், இளநகர், பெருநகர், ஆக்கூர், கூரம், கூழமங்கலம், மாங்கல் கூட்டுச்சாலை, துாசி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்தோர் இப்பேருந்து மூலம் பயணித்து பல்வேறு பணிகள் கராணமாக காஞ்சிபுரம் சென்று வருகின்றனர்.
இந்த வழி தடத்தில் நாளொன்றுக்கு மூன்று வேளை சென்றுவரும் இப்பேருந்து சில மாதங்களாக ஞாயிற்றுக்கிழமை முழுதுமாக இயங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிக்க போக்குவரத்து வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக பெண் பயணியர் இலவச பயணம் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
எனவே, இந்த வழி தடத்திலான அரசு பேருந்து முறையாக இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரணிமண்டபம் சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.