/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் கிளை நுாலகம் முழு நாள் செயல்பட எதிர்பார்ப்பு
/
வாலாஜாபாத் கிளை நுாலகம் முழு நாள் செயல்பட எதிர்பார்ப்பு
வாலாஜாபாத் கிளை நுாலகம் முழு நாள் செயல்பட எதிர்பார்ப்பு
வாலாஜாபாத் கிளை நுாலகம் முழு நாள் செயல்பட எதிர்பார்ப்பு
ADDED : டிச 26, 2025 06:02 AM
வாலாஜாபாத்: வாலாஜாபாதில், பகுதி நேர நுாலகமாக இயங்கும் கிளை நுாலகத்தை முழு நாள் செயல்பட மாணவ - மாணவியர் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக கிளை நுாலகம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நுாலகத்தில், வாலாஜாபாத் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 4,900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் இந்த நுாலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
நுாலகத்திற்கு வரும் மாணவ - மாணவியர் செய்தித்தாள் மற்றும் அரசு தேர்வு பாடநூல்கள், பொது அறிவு புத்தகங்கள் படித்து தங்களது வாசிப்பு திறனை மேம்படுத்தி கொள்கின்றனர்.
இந்த கிளை நுாலகம் காலை 9:00 மணிக்கு துவங்கி, மதியம் 12:30 மணி வரையிலும், மீண்டும் மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இயங்குகிறது.
ஒரு நாளில் ஆறரை மணி நேரத்திற்கு மட்டுமே நுாலகம் இயங்குகிறது. இதனால், குறைவான இந்த கால நேரத்தை பயன்படுத்தி மாணவ - மாணவியர் தங்களுக்கு நுாலகம் மூலம் கிடைக்க வேண்டிய மொத்த பயன்பாட்டை பெற முடியாத நிலை உள்ளதாக கூறி வருகின்றனர்.
எனவே, இந்த கிளை நுாலகத்தை காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை வேலை நேரமாக கொண்ட முழு நேர நுாலகமாக இயக்க துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

