/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு மருத்துவமனையை சுற்றி கழிவு பொருட்கள் காஞ்சியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

ADDED : டிச 13, 2024 01:57 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 670க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 3,000 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தி சேதமடைந்த படுக்கை மெத்தை, படுக்கை விரிப்பு உள்ளிட்ட குப்பை கழிவுகள் மருத்துவமனை பின்புறம் வைகுண்டபுரம் தெரு ஒட்டியுள்ள மதில் சுவர் அருகில் குவியலாக குவிக்கப்பட்டுள்ளது.
மட்கும் நிலையில் உள்ள மருத்துவமனை கழிவு பொருட்களில் இருந்து வெளியாகும் துர்நாற்றம் அருகில் உள்ள வவைகுண்டபுரம் தெருவில் வசிப்போருக்கு தொந்தரவு அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. மருத்துவமனை வளாகத்திலேயே குப்பை குவியல் மலை போல் குவிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் மருத்துவமனை கழிவு பொருட்கள், வைகுண்டபுரம் தெருவை ஒட்டி குவித்து வைக்கப்படுவதால், நோயாளிகளுக்கு மட்டுமின்றி அருகில் வசிப்போருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த கழிவுப்பொருட்களை, மருத்துவமனை வளாகத்தில் இருந்து உடனடியாக அகற்ற நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.