/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : செப் 29, 2025 12:56 AM

உத்திரமேரூர்:சோமநாதபுரத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி சாலையோரத்தில் தேங்கி வருகிறது.
உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 40,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் குடிநீர் தேவைக்காக வெங்கச்சேரி செய்யாறில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
இக்கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, குழாய் மூலம், உத்திரமேரூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்படுகிறது. இந்நிலையில், உத்திரமேரூர் சாலையில் சோமநாதபுரம் பகுதியில், சாலையோரம் புதைக்கப் பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து, குடிநீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி வீணாகி வருகிறது. மேலும், சாலையோரம் தேங்கும் தண்ணீரில் கொசு உருவாகும் வாய்ப்பு உள்ளது.
எனவே, சோமநாதபுரம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.