/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊத்துக்காட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
ஊத்துக்காட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : டிச 07, 2024 01:22 AM

வாலாஜாபாத்,
வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு கிராமத்தில், பழங்குடியினர் மக்களுக்கென அரசு சார்பில் வீடுகள் கட்டி குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இப்பகுதியில், 76 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக, அப்பகுதி குடியிருப்பு அருகே, திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணறு வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீர், தெருக்களில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏற்றி, அதன் வாயிலாக அப்பகுதிவாசிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கிணற்றில் இருந்து குடிநீர்தொட்டிக்கு செல்லும் இணைப்பு குழாய் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
மேலும், வீணாகும்தண்ணீர் அப்பகுதியில்தேக்கமாகி சகதியாக காணப்படுகிறது. இதனால், கொசு உற்பத்தி போன்ற சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, ஊத்துக்காடு இருளர் குடியிருப்புக்கான குடிநீர் கிணற்றில் இருந்து, தொட்டிக்கு செல்லும் இணைப்பு குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.