/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் நிலை என்ன? கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி., பாலு கேள்வி

ADDED : டிச 08, 2024 02:17 AM

காஞ்சிபுரம்:மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி ஆய்வு நடத்த, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்த வேண்டும்.
இக்குழுவின் தலைவராக, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியின் எம்.பி., -டி.ஆர்.பாலு உள்ளார். இக்கூட்டம், மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், சரியான காரணங்களை தெரிவிக்காமல், இக்கூட்டத்தை தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தனர். இரண்டு முறை பல்வேறு காரணங்களால் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
எம்.பி.,க்கள் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில், டிச., 7ல் இக்கூட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் கலெக்டர் வளாக அலுவலக கூட்டரங்கில், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., பாலு தலைமையில் நேற்று காலை கூட்டம் நடந்தது.
ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மக்கள் நல்வாழ்வு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து எம்.பி., பாலு கேள்வி எழுப்பினார்.
திட்டங்களின் தற்போதைய நிலை பற்றியும், திட்ட செயல்பாடுகளில் சுணக்கம் பற்றியும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, குழுவின் இணைத் தலைவரும், காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி.,யுமான செல்வம், தி.மு.க., - -எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், போலீஸ் எஸ்.பி., சண்முகம், திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.