/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ளை நிற தர்பை பூக்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
/
வெள்ளை நிற தர்பை பூக்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
வெள்ளை நிற தர்பை பூக்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
வெள்ளை நிற தர்பை பூக்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
ADDED : டிச 10, 2025 08:02 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் பூத்திருக்கும் தர்பையில் விளையும் வெள்ளை நிற பூக்களால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், திருத்தணி - காஞ்சிபுரம் - சதுரங்கப்பட்டினம் இருவழி சாலை, 448 கோடி ரூபாய் செலவில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையோரத்தில், நாணல், தர்பை ஆகிய இரு விதமான புல்கள் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ளன. இந்த தர்பை புல்லில் பூத்திருக்கும் வெள்ளை நிற பூ உதிர்ந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.
குறிப்பாக, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், கோவிந்தவாடி, பெரியகரும்பூர், விஷகண்டிகுப்பம் உள்ளிட்ட ஏரிநீர் வரத்துக் கால்வாய் மற்றும் ஏரியை ஒட்டிய பகுதிகளில் தர்பை புல்லின் பூக்கள் பறக்கின்றன.
இதனால், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. மேலும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
எனவே, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையோரம் பூத்திருக்கும் தர்பையில் விளைந்துள்ள வெள்ளை நிற பூக்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

