/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படூர் கூட்டுச்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?
/
படூர் கூட்டுச்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?
படூர் கூட்டுச்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?
படூர் கூட்டுச்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?
ADDED : மார் 15, 2025 06:44 PM
படூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், படூர், அமராவதிபட்டிணம், காட்டாங்குளம், ஆனம்பாக்கம், சிறுமையிலுார், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்கள், உத்திரமேரூரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் உள்ளது.
இக்கிராமங்கள், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டவையாக உள்ளன. இக்கிராமங்களுக்கும், காவல் நிலைய பகுதிக்கும், 25 கி.மீ., துாரத்திற்கு இடைவெளி உள்ளதால், குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
மேலும், திருட்டு, வழிப்பறி மற்றும் மோதல் போக்கு சமயங்களில், தகவல் அறிந்தும் உடனுக்குடன் வந்தடைய முடியாத நிலையும், போலீசாரின் ரோந்து பணியிலும் சிரமம் இருந்து வருகிறது.
இதனால், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நீண்ட துாரம் இடைவெளியான கிராமங்களை ஒருங்கிணைத்து, படூர் கூட்டுச்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்க பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க, 6 ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்காக கட்டடம் ஏற்படுத்தும் பணி துவங்கப்பட்டது.
பின், நிர்வாக ரீதியான காரணங்களால் முதற்கட்ட பணியின் போதே அத்திட்டம் கைவிடப்பட்டு முடங்கி போனது. அதை தொடர்ந்து, இதுவரை அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது.
எனவே, படூர் சுற்றுவட்டாரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும் படூர் கூட்டுச்சாலையில், புறக்காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.